எனக்கு பிடித்த கவிதை.. (யார் எழுதினது?)
பிறகெப்படிக் காதலிப்பது?
குழந்தையாய் நீயிருக்கும்
கருப்புவெள்ளைப் படத்தை
பர்சுக்குள் பதுக்கிவைத்த வானவில்லைப்போல
பார்த்துப் பார்த்துப் பரவசப் படுவதும்...
"அழகி" என்று சொல்லி சொல்லியே
அழகி, உன்னைப் பேரழகியாக்கிட
நான் செய்யும் முயற்சிகளும்...
நீ சும்மா சொல்லும்
"பேச மாட்டேன் போ" க்களுக்கெல்லாம்
ஒரு குழந்தையைப் போல
உன்னிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாடுவதும்...
"ம்ம்ம். நல்லா இருக்கு!"
நீ சொல்லும் இந்த மூன்று வார்த்தைகளுக்காக
மூன்று லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி
நான் கவிதைகள் பொறுக்குவதும்...
உன் மௌன விரதநாட்களிலும் கூட
தொலைபேசியில் உன்னையழைத்து
நான் மட்டும் பேசிக்கொண்டிருப்பதும்...
நம் முதுமையில் வாசித்து மகிழஇப்போது நீயனுப்பும் குறுஞ்செய்திகளையெல்லாம்
நாள் பிரித்துக் கணினியில் பத்திரப்படுத்துவதும்......
எல்லாமே இவர்களுக்குப்
பைத்தியக்காரத்தனமாய்த் தெரிகிறதாம்!
இருந்து விட்டுப் போகட்டும்...
பைத்தியமாகாமல் பிறகெப்படிக் காதலிப்பதாம்?
எழுதியது யார் என தெரிந்தால் சொல்லுங்களேன்.. ப்ளீஸ்..
9 பார்த்தவங்க..:
இது "காதல் பேரரசு" அருட்பெருங்கோ எழுதியதுங்க.
http://www.arutperungo.blogspot.com
அருட்பெருங்கோ என்கிற ஒரு லூசு :)
சூப்பர் அருட்பெருங்கோ!!
மிள் பதிவிற்கு நன்றி !
என் அனுபவங்கள் அப்படியே கவிதையாய்.........
என் அனுபவங்கள் அப்படியே கவிதையாய்.........
இளா,அருட்பெருங்கோ,சுந்தர்,அன்பேசிவம் அனைவருக்கும் நன்றி தொடர்ந்து வாருங்கள்..
அன்பேசிவம் கவிதை அருட்பெருங்கோவினுடையது..
naan dhan eludhunen... nalla iruka vincent????? post senjudu da comment a pls en friend la
Post a Comment